“எழுத்தென வுள்ள தெல்லாம்
இதயத்தில் பதித்துக் கொண்டே,
‘அழுத்துதிச் சுமையெ’ன் றங்கங்
கவிழ்த்துகுத் தாவ தென்ன ?
பழித்ததை யொழித்துப் பண்பு
படிந்தவ ராகிப் பாரில்
வழுத்துறும் வாய்மை யொப்ப
வாழ்வதே வழிவாய்ப்” பென்றேன்.
“இளக்கமா ‘யெடுப்பார்ப் பிள்ளை’
யெனஇருந் தேமா றேன்நான் ;
விளக்கமாய்ப் புரியச் செய்வீர்
வியன்ஞாலத் தியல்பை யெல்லாம் !
துளிக்குமா றுள்ள வானம்
தொடர்ந்துபெய் துதவா தாயின்,
அளிக்குமா றுள்ள ஞாலம்
அறுகேனு மளிக்கா” தென்றள்.
“‘காம்புகா யிலை, வேர்,—யாவும்
கசப்பெ’னப் பகரும், காட்டு
வேம்பது மட்டு மன்று ;
வெகுகாலம் வெளியு முள்ளும்
தீம்பெனத் தெரிந்தும் செய்து
திளைக்கும்நாம், திருந்தித் தேர்ந்திங்
கோம்புதற் கிருந்து மோம்பா
வுண்மையும் கசப்ப தொன்றே !
தீனத்தைப் பற்றி யாய்ந்தும்,
தேசத்தைப் பற்றி யாய்ந்தும்,
வானத்தைப் பற்றி யாய்ந்தும்,
வாழ்வினைப் பற்றி யாய்ந்தும்,—
மானத்தைக் காத்து, மன்னி
மாண்பெய்த விரும்பும் மாதே !
—ஞானத்தை யெய்தி னுண்மை
நலம்துய்த்தோ ராவோ” மென்றேன்.
பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/80
Appearance
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை