பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

65

19. பச்சியும் போண்டாவும்

கையிலே காசைத் தந்து
கணக்காகச் சாமான் வாங்கிப்
பையிலே போட்டுக் கொண்டு
பரபரப் பாய்வந் துற்றள்,
நையினும் மெய்,கை,—யுள்ளம்
நலியாத நல்ல பாட்டி !
வையினும் சிரித்துக் கொள்ளும்
வழிச்சுமைப் பையன் பின்னல் !

நோவன செய்வ தோரா
நுண்ணுணர் வோடும், நோக்கில்
‘ஏவெ’னும் கண்ணி யுங்கண்
டெழுந்தெதிர் நின்றங் கொன்றி,
மேவின பொருள்மேல் கண்ணும்
மேவிடச் செய்து, மின்னப்
ஆவன அளைந்து செய்தற்
கடுப்பின்பா லான ளன்றே !

“குணிலடு முரசங் கொண்ட
கோமகள், குறையொன் றின்றி
யுனலுடுத் துறங்க லுற்றங்
குவந்திடா துழைத்த ‘லொண்ணீர்
மணலடுத் துதித்த லர்ந்த
மணங்கமழ் நளினம், மாயத்
தனலடுத் திட்ட’ தென்னத்
தானயிற் றன்ருே ?” வென்றேன்.

“கரிசனம் தனக்கென் நன்றி !
கவைக்குத வாத நானே
ரரசனின் புதல்வி யாய்ப்பின்
அயலானின் மனைவி யாயின்,
சரிசம னகச் சார்ந்து
சலிப்பின்றிக் கடமை செய்தல்,
துருசிலா வுளத்தில் தொக்குத்
துணையாகுங் குணமிஃ” தென்றள்.