66
“‘நாருக்கு மணத்தை நல்கும்
நறுமண மலர்நா’ னென்றிவ்
வூருக்குள் ளொருத்தி நீயுற்
றுரைப்பதி லுண்மை யில்லை!
‘நீருக்கு நேசங் காட்டும்
நெருப்புள்ள’ தென்று நின்றிப்
பாருக்குப் பகர்ந்தால் நம்பும்
பைத்திய மதுவன்” றென்றேன்.
“‘எரியூட்டி னன்றிக் காயா
தெண்ணெயும் சுட்ட’ தென்று
வரியோட்டிக் கவிதை பாடி
வைத்தாலும் நம்பா திப்பார்!
கரியூட்டிக் கசக்கப் பண்ணும்
காய்ச்சல்சற் றதிக மானல்!
சரியூட்டிச் சுட்டா லன்றிச்
சாமான்கா சாகா தென்றும்!
‘தீண்டாது தீசு டாது;
தின்னது பசியா றது;
தூண்டாது திருவி ளக்கும்
துலங்கிடா’ தென்ப தோரீர்!
வேண்டாது பேசி, வேலை
விரும்பாது செய்தா ‘லேண்டா
போண்டாவைக் கருக்கிப் போட்டாய்?
போக்கிரி !’ யென்பாள், பாட்டி.
ஆவதை யலசி யாய்ந்திங்
கனைத்தையும் துலக்கும் பாட்டி,
நாவதை யசைக்கா தொன்றும்
நடைமுறைக் கிசைய மாட்டா!
‘பாவதை யாத்துப் பாடும்
பாவலர், பாவை யுள்ளம்
நோவதை நூக்கா’ ரென்று
நுவலும்நூல் நூறுண்” டென்றள்.