உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

67

“மூட்டையை யவிழ்த்துக் கொட்டி
‘முழுதும்நெல்’ லென்றென் முன்னல்
நீட்டிநீ முழக்கா தே ; யென்
நினைவெலாம் நிலைத்தி ருந்த
ஏட்டையும் மறந்து விட்டிங்
கெப்போது முனைநா னெண்ணப்
பாட்டியே பழகப் பண்ணிப்
பாழ்செய்தாள், பணியை” யென்றேன்.

“ஆழிகா ணத சங்கோ ?
அரசுகா ணத பங்கோ ?
மேழிகா ணத காடோ ?
மேதைகா ணத ஏடோ ?
ஊழிகா ணத போதோ ?
உலகுகா ணத நாதா !
கோழிகா ணத தொன்றும்
குஞ்சுகா ணத, கண்டீர் !

கரும்புங்கால் முதிர்ந்தா லன்றிக்
களிப்பளிக் காதாம், சாறும் !
அரும்புங்கா லரும்பிப் போதா
யலருங்கா லலர்ந்த ருந்தச்
சுரும்புங்கால் கொண்டு றிஞ்சின்
சுகந்தரும் மலர்போல், பெண்தான்
விரும்புங்கால் விரும்பு மாண்மை
விறது வேட்கைப் பேறே !

ஆடவ னென்னும் பீடே
அரியாச னத்த மர்ந்து
நாடுவ தனைத்தும் நாடி
நல்லதை நயந்து செய்து
தேடுவ தகனத்தும் தேடித்
திருமணக் காவல் மேவின்,
‘ஈடெவ’ னென்னும் வீடே !
இன்பமு மெய்திற்” றென்றள்.