68
20. எச்சரிக்கை
உச்சிவந் தொன்றும் போதன்
றுள்ளத்தி லுவகை யூற்ற
யச்சில்வார்த் ததுபோன் றல்லி
யருகில்வந் தமர்ந்தாள் “ஆய்ந்து,
கொச்சியில் கப்ப லேறிக்
‘குவய’த்தி லிறங்கிக் குந்த
நிச்சயம் செய்தேன் நானென்
நீலவான் நிலவே, நேற்று !
‘செயத்தக்க வல்ல செய்தான்,
சீரழி வுற்றன் ; சேரச்
செயத்தக்க செய்யா தானும்
சிறுமைக்குள் ளான’ னென்றே
நயத்தக்க விதமாய்ச் சொல்லும்
நாயனர் சொல்லை நம்பி,
வியத்தக்க செல்வம் தேட
வெகுவாக விரும்பு கின்றேன்.
காருணும் கூந்தல், கோவைக்
கனியுணும் செவ்வா யல்லீ !
ஊருணி நீர்நி றைந்தாங்
கொப்பற்ற செல்வம் தேடிப்
பாருணப் பரிந்து தந்து,
பாரியாய் நானும் பாரில்
பேருண வேண்டு மென்னும்
பெருவேட்கை யுற்றே” னென்றேன்.
“படலைவிட் டிருக்கா இந்தப்
பலகாரக் கடையில், பச்சி
சுடலைவிட் டிருக்கப் போயச்
சுறவுலாம் கரிய மூரிக்
கடலைவிட் டிருக்காக் கப்பல்
கண்டேறக் கூடுங் கால்நீர்,
‘உடலைவிட் டுயிர்போ யிற்’றென்
றுரைக்குமூ ரெனைக்கண்” டென்றள்.