உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

69


“கொள்ளவும் கூட வில்லை ;
குறிப்புடன் கூறு முன்சொல்
தள்ளவும் கூட வில்லை;
தரித்திரன் தனங்கண்’ டென்ன
அள்ளவும் கூடு முன்னே ;
யணைத்தகத் தாசை தீர்க்கத்
துள்ளவும் கூடும் நீயும் !
துப்பவும் கூடும், ஆயும் !

“பசிப்பது பாவ மாமோ ?
பசியாறு மாறு பார்த்துப்
புசிப்பது பாவ மாமோ ?
‘பூவை நீ புலன்ம யக்கி
யிசிப்பது பாவம் ! ஏங்கி
யிதயம்நொந் தின்ன லுற்று
வசிப்பது பாவ’ மென்னும்
வழக்காறு வகுப்பே” னென்றேன்.

“சுற்றந்தா னகச் சுத்தச்
சூரன்தா னகச் சொன்னல்,—
மற்றுந்தான் மயக்கத் தக்க
மன்மத னக ! மாறய்ச்
சற்றுந்தா னெதிர்பா ராத
சமயத்தில் சதிசெய் தந்தக்
குற்றந்தான் புரிந்தா லென்னைக்
கொன்றேனு மானு னன்றே !

பனியாகக் காலம் மாறின்
பயிரெல்லாம் களத்தைக் காணும் !
கனியாகும் வரையும், காயும்
காத்திடும் மரத்தில் கண்டீர் !
இனியாகி லும்நீர் மற்றிவ்
வியல்பினை யேற்றிங் கே நாம்
தனியாகத் தங்கும் போழ்து
தமிழ்கற்பித் தருள்வீ” ரென்றள்.