பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

70

ஆய்நீங்கி னப்போ தேமற்
றல்லியின் செவியில் நானென்
வாய்நீங்கி வந்த வார்த்தை
வாரியே கொட்டும் கெட்ட
நோய்நீங்கி, நோற்றேன் போன்று
நொடியிலே மாறி நோக்கிப்
“பேய்நீங்கும் போதும் பெண்மைப்
பெருமைநீங் காது போலும்!

செம்மைசெய் கின்ற நல்ல
சிந்தனைத் திறன்சேர்ப் பித்திங்
‘கிம்மையும் மறுமை யும்மற்
றெய்திடற் கருக’ ரென்னத்
தம்மைத்தா முயர்த்தத் தத்க
தார்மிகத் தகைமை சாற்றும்
அம்மையே! பொறுத்தி நீயென்
அறியாமை தனையின்” றென்றேன்.

“கட்டது கழன்று காளை
காடுமே டாகி யோடக்
‘கெட்டது பயிர்தா’ னென்று
கேளிரும் தடுத்து மொத்தப்
‘பட்டது போது’ மென்றே
பயந்தது திரும்பி வந்து
விட்டது வீட்டுக் கேனும்
வேதனை மீந்த” தென்றள்.

மாதினை மகிழ்ந்து பார்த்து
மறுமாற்ற மளித்தேன்; “மானே!
வேதனை மிச்ச மேனும்,
வெஞ்சினம் தொச்ச முண்டுன்
காதினை மசித்துச் சுற்றிக்
கைமுறுக் காக்கிக் காட்டிச்
சாதனை புரியத் தக்க
சமயமும் சாரு” மென்றே.