இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
71
“பழுத்தறி யாத பச்சைப்
பசுங்காய்க்குப் பாரின் மீது
விழத்தெரி யாது, கல்லே
வீசியே அடித்தா லன்றித்
தொழத்தெரி யாது துாய
தொன்மைசால் தமிழுக் கேனும்,
‘அழத்தெரி யாதல் லிக்கென்
றறிவித்தோ ரவர்யா ரையே !
இழுத்தறி யாத காளை
‘ஈரம் போய் விடுமே யிங்கென்’
றுழத்தெரி யாதான் கட்டி
யோட்டிய கதையோ ராதீர் !
எழுத்தறி யாத பெண்ணும்
ஏமாற ளென்றும் தாலி
கழுத்தறி யாது, காத்த
கற்பில்கை வைத்தற்” கென்றள்.