பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

72

21. வெற்றி தோல்வி

‘இயக்கவே யிருந்து வந்த
எந்திரம் பழுதுற் றின்று
வியக்கவே சீர்செய்’ தென்ன
விளங்கிட இருந்த என்னை,
மயக்கவே மனைக்குள் வந்து
மாறகப் பேசித் துன்பம்
பயக்கவே பணிந்து, பையப்
பைந்தொடி அமர்ந்தாளன்றே!

புத்தக மின்றிக் கையில்,
புன்னகை முகத்தில் பூத்தவ்
வித்தகி யெதிரில் வீற்று
விரைந்தெனை விரும்பி நோக்க,
“உத்தமீ ! பித்தாய்ச் செய்தென்
உளத்துப்புல் மேயும் மானே!
சித்தம்நோய் செய்தற் கின்றும்
சேர்ந்ததேன் வந்திங்” கென்றேன்.

“ஓவிய மொப்பக் கற்போ
ருள்ளத்தி லொன்றிக் கொள்ளும்
பூவியல் சொற்கள் பெய்துப்
புதுமையாய்க் கவிதை செய்வீர்!
பாவியும் படித்துப் பார்த்துப்
பாமரப் பான்மை மாய்க்கும்
காவிய மெனக்குங் கொஞ்சம்
கற்பிப்பீ” ரென்றள், கன்னி.

“‘அறிவற்றங் காத்தற் கான
அரும் பெருங் கருவி! மற்றும்,
செறவுற்று முள்ள ழித்தல்
செயலாகா அரணஃ’ தென்று
திறவுற்றுச் செப்பும் நல்ல
திருக்குறள் தனைத்தே ராநீ
வுறவுற்றுக் காவி யத்தில்
உளம்புகுத் துவதே” னென்றேன்.