பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

73

“படித்துக்காட் டுங்கால், பண்புப்
பாத்திரம் பார்ப்ப தொப்ப
அடுத்துக்காட் டும்ப ளிங்காய்
அகம்புற மாய்ந்த மைத்து
முடித்தும்காட் டும்வி தத்தில்
முறையாக முளுமை யாக்கும்
எடுத்துக்காட் டிலக்கி யங்கண்
டில்லறம் புனைதற்” கென்றள்.

“கண்ணுண்டு களிக்க வாய்த்த
கவின்மிகு மயிலே ! காதும்
பண்ணுண்டு களிக்க வாய்த்த
பைந்தமிழ் காவி யங்கள்
மண்ணுண்டு களிக்க வாய்த்த
மாந்தர்க்குப் பலவுண் டேனும்,
‘எண்ணுண்டு களிக்க வாய்த்த
இலக்கிய’ மெனவொன் றுண்டே!

“‘ஓவிய’ மாயென் னுள்ளத்
துறைகின்ற தேவீ! ஓதும்
காவிய மியற்றிக் கண்முன்
காட்டிக்கற் பிப்பேன்; நீ,யென்
னவியு மகலா முன்னுன்
அகமது மலர்ந்து மற்றிப்
பாவியை யணைத்து முத்தம்
பரிசொன்றீ வாயோ?” என்றேன்.

“ஒன்றல்ல; இரண்டு மல்ல;
ஒருநூறு முத்த மீவேன்!
இன்றல்ல; நாளைக் கல்ல;
இயல்பாக மணந்து கொண்டு
நன்றல்ல தில்லா நீரென்
நாயக ன்ன அன்றே !”
என்றல்லி விளம்ப,— “அன்றே
இலக்கியம் கிளம்பு”’ மென்றேன்.