உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

74


‘முனிவுற்று முகஞ்சி வந்து
முனைப்புற்று மொழிந்தா “ளின்றென்
மனுவுற்றுக் கேட்டி ரங்க
மாட்டீர்நீர் ! மயங்கி மாறய்க்
கனிவற்ற கவிஞ ராகிக்
கைம்மாறு கோரு வீர் ! நும்
தினவிற்ற தாயின் நானே
தேய்க்குங்கை யாய்த்தோற் கின்றேன்.

‘மடவாதி மாயும் போதும்
மயக்கத்தை மாற்ற’ னென்னும்
அடவாதி யாயுள் ளீர்நீர் !
ஆயினும் பரவா யில்லை !
நடுவாதி யந்தங் காண
நானின்று துணிந்து நல்ல
திடவாதி யாகின் றேன் ; நும்
திருவடி சரண”’ மென்றள்.