பக்கம்:பரிசு மழை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 டாக்டர் ரா. சீனிவாசன் வாழ்வுக்கு வழி வகுக்கும் நடை பாதைகள்; அவற்றை நிறைவு செய்யும் சுருசுருப்புக்காரர்கள். அந்தப் பூங்காவைச் சுற்றி வருபவர் பல திறத்தினர். மருத்துவர் அறிவுரைப்படி எடை குறைப்பதற்காக நடை பயில்பவர் பலர்; குளிர் சாதனங்களில் உறைபனியாகக் கிடப்பவர்கள் வியர்க்கும் தடங்களாக அந்தப் பூங்காவைப் பயன்படுத்தினர். எந்த நோக்கமும் இல்லாமல் ஒரு சிலர் திரிவதும் உண்டு. அவர்களில் ஒருவர் மற்றொருவர் கண்ணில் அகப்பட்டார்; அடுத்தவருக்கும் எந்த வேலைவெட்டி இருந்ததாகத் தெரியவில்லை. இரு கை ஒடிந்த நாற்காலியை அவர்கள் இருக்கை யாகக் கொண்டனர். பொதுவாக பொதுப் பூங்காக்களில் கை ஒடியாத நாற்காலிகளைக் காண்பது அரிது. கைவைத்துக் கொண்டு பேச முடிவதில்லை. அவர் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்து இருந்தன. பெரும்பாலும் இப்படிப் பூங்காவில் உட்காருகிற வர்கள் தனிமையைத்தான் நாடி வருகிறார்கள். இரண்டுபேர் உட்கார்ந்து இருந்தால் பேசாமல் இருப்பது இந்த நாட்டு வழக்கம் அல்ல; ரயில் வண்டிகளில் ஏறி அமர்ந்தால் ரேஷன் கார்டு விசாரணைகள் நடக்காமல் இருப்பது இல்லை. "மூத்த பையன் டை கட்டிக் கொண்டு விற்பனை விளம்பரக்காரனாக இருக்கிறான்; அவனுக்கு வேறு நல்ல வேலை கிடைக்கவில்லை" என்றார். "டை கட்டிக் கொண்டு" என்று கூறியது மற்றவருக்கு வியப்பைத் தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/10&oldid=806765" இலிருந்து மீள்விக்கப்பட்டது