பக்கம்:பரிசு மழை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 9 "இப்பொழுது இப்படித்தான்; இளைய வாலிபர்கள் பாண்டும் சட்டையும் அணிந்துகொண்டு சென்சஸ் கணக்கு எடுப்பவர் போல் வீட்டுப் படிகளில் ஏறுவதைப் பார்த்திருக்கலாம். அவர்கள் டை கட்டிக் கொண்டு இருப்பார்கள்" என்று விளக்கம் தந்தார். "ஏன் இது?" என்று கேட்டார். "இது ஒரு அடையாளம், கருப்பு அங்கவஸ்திரம் அணிந்து வருபவர் சபரிமலை உண்டியல்கள்; கட்சிக்காரர்கள் அவர்களைப் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. கருப்பும் சிவப்பும் அவர்களைக் காட்டிக் கொடுக்கும். மஞ்சள் புடவை வேட்டி கட்டிக் கொண்டு வந்தால் திருப்பதி என்று சொல்லலாம்; இப்படி எல்லாம் அறிமுக அடையாளங்கள்” என்று விளக்கினார். "அடுத்தவன் கவிதைகள் எழுதுவான்; டிவிக்களைச் சுற்றி வருவான்; கேட்டால் சிறகடித்துப் பறக்கிறேன் என்கிறான்” என்றார். "ஒரு சில கவிஞர்கள் உச்சாணிக் கிளையைத் தொடுகிறார்கள்; அந்தக் கவர்ச்சி இவாகளுக்கு" என்று மற்றவர் பதில் கூறினார். "அடுத்தவள் பெண்; படித்துவிட்டு அஞ்சல் கல்வித் தேர்வுகள் எழுதிக் கொண்டிருக்கிறாள்" என்றார். "அது என்ன? அதில் என்ன சிறப்பு:” "இந்த அஞ்சல்கல்வி நிறுவனங்கள்தான் மணமாகாத பெண்களுக்கு இன்றைய அடைக்கலம் என்ன செய்கிறாய்? என்று கேட்டுப் பாருங்கள். 'அஞ்சல்வழிக் கல்வி" என்று கூறுவார்கள்" என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/11&oldid=806776" இலிருந்து மீள்விக்கப்பட்டது