பக்கம்:பரிசு மழை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 டாக்டர் ரா: சீனிவாசன் அவர்கள் ஒருவரும் உறுதியான வாழ்க்கையை எட்டிப் பிடிக்கவில்லை என்பது அவர் பேச்சின் சுருக்கமாக இருந்தது. நெருக்கமாக அப்படி ஒன்றும் அவர்கள் பழகி யதில்லை. இருந்தாலும் மற்றவருக்கு அந்த ஆசாமியை மறக்க முடியவில்லை. அந்தப் பூங்காவில் அவர் பார்வை அந்த உருவைத் தேடியது; பிறகு அவரைப் பார்க்க முடியவில்லை. ஆண்டுகள் மூன்று கடந்தன; பூக்கடை பக்கத்தில் ஒரு சாக்கடை, அதனை ஒட்டி ஒரு டீக்கடை அங்கே அவர் எதிர்பாரதபடி காணப்பட்டார். விலை குறைவு; அதனால் தெருவோர டீக்கடை அவருக்குப் புகலிடம் தந்திருக்கிறது. சூடாக டீ குடிக்க வேண்டும்; எங்கே குடித்தாலும் என்ன ? டீ ஒன்றுதான்; பில்தான் வேறு; அங்கே இடத்துக்குக் காசு இல்லை; உணவு அகங்களில் அதற்குத் தான் காசு இந்த வித்தியாசத்தை அறிந்தவர்கள் இருவரும். அதனால் அந்த இடத்தில் அவர்கள் சந்திக்க நேர்ந்தது.

  • *

என்ன உங்களைப் பூங்காவில் காண்பது இல்லையே?" என்று ஒரு அம்பு தொடுத்தார். "பெரியவன் பெரிய கம்பெனி மேனேஜர் ஆகிவிட்டான் அடுத்தவன் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதி வாரப் பத்திரிகைகளுக்குப் பேட்டிகள் கொடுத்துக் கொண்டு இருக்கிறான்' "பெண் ஒரு பேரனை எனக்குப் பெற்றுத்தந்து குபேர வாழ்வு வாழ்கிறாள்" என்றார். அதற்குமேல் அவர்கள் பேசினார்கள்; அதைப் பற்றி எழுதுவது தேவை இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/12&oldid=806787" இலிருந்து மீள்விக்கப்பட்டது