பக்கம்:பரிசு மழை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 11 அந்தப் பெரியவர் ஏன் இப்பொழுது பூங்காவுக்குச் செல்வது இல்லை. இதுதான் வினா! பரிசு மழைக்கு உரிய கேள்வி இது!. 3. அதிர்ச்சி ஸ்கூட்டர் என்றாலே அதற்கு இரண்டு சக்கரங்கள் என்பது பெயர் சைக்கிளில் இருவர் செல்வதற்கு ஒரு காலத்தில் அனுமதிக்கப்படுவது இல்லை; அஞ்சி அஞ்சித்தான் பின்னால் ஒருவரை ஏற்றிச் செல்வது அப்பொழுது நிலை; "அடிபட்டுச் சாகட்டும்; அதை ஏன் நாம் தடுப்பது" என்ற தாராளக் கொள்கையில் இருவர் போவதை இன்று தடுப்பது இல்லை. ஸ்கூட்டர் வந்ததும் அதில் தனியொருவர் செல்வது மிகுதியாக இல்லை. ஆபீசுக்குப் போவது என்றால் தனிமை, வெளியே செல்வது என்றால் இருவர் செல்வதுதான் இனிமை; அடைபட்டுக் கிடந்தவர்கள் அதில் தடையின்றி ஏறி வெளியே செல்கின்றனர். இருவர் செல்வதுதான் அதற்கு ஏற்றம் சேர்க்கிறது. காதலர்கள் என்றால் அவர்களை ஸ்கூட்டரில்தான் பார்க்க முடிகிறது. கலியாணம் ஆனதும் மாப்பிள்ளை கேட்கும் முதல் பொருள் ஸ்கூட்டர்தான்; அதை வாங்கித் தரவில்லை என்றால் பெண்ணை அழைத்துச் செல்ல மறுப்பவரும் உளர் மாப்பிள்ளை என்றால் அவரோடு பிறந்ததுதான் ஸ்கூட்டர் என்று ஆகிவிட்டது. அது கூட இப்பொழுது காருக்கு நிகராகப் போட்டி போட்டுக் கொண்டு விலை உயர்வு அடைந்து விட்டது என்று கேள்வி. அவர்கள் இருவரை ஸ்கூட்டரில் பார்ப்பது வழக்கமாகி விட்டது. அவர்கள் யார்? எங்கிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/13&oldid=806805" இலிருந்து மீள்விக்கப்பட்டது