பக்கம்:பரிசு மழை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ல் டாக்டர் ரா. சீனிவாசன் வருவார்கள் என்பது தெரியாது; இதே தெருவில் அவர்களைப் பலமுறை பார்க்க நேர்ந்தது; அவனை இறுகப் பிடித்துக் கொண்டு தனக்குள்ள பிடிப்பைக் காட்டிக் கொள்ள உதவும் வண்டி இதுதான். இருவர் என்பதால் அவர்கள் இந்தத் தெருவில் செல்வதால் கணவன் மனைவியராகத்தான் இருக்கவேண்டும்; அவர்கள் செல்வதில் எந்தப் புதுமையும் இல்லை. என்றாலும் தொடர்ந்து அவர்களைப் பார்ப்பதால் அவர்கள் மற்றவர் மனதில் பதிவினை ஏற்படுத்தினர். தெருவில் தக்காளி விற்பவன் அவனை அடிக்கடி பார்க்க முடிகிறது; இளநீர் வண்டிக்காரன்: வாழைப்பழவண்டி, உப்பு மூட்டை இழுத்துச் செல்பவன், பலூன் விற்பவர் இப்படி எத்தனையோ பேர்; அவர்களில் இந்த ஸ்கூட்டரும் ஒன்று: காரில் சென்றால் அந்த மூட்டை முடிச்சுகளைக் கவனிக்க முடிவதில்லை. அதே இருவர் கடற்கரைச் சாலையில் பார்த்தால் அவர்களை வேறுவிதமாகவும் பார்க்க நேர்கிறது. அதுவும் மாலைப் பொழுதில் அங்கு மணல் பக்கத்துச் சாலையில் ஒதுக்கி விடுபவரை முடிவு செய்ய வேண்டி நேர்கிறது. அதிகமாக மேல் விழுந்து நடந்தால் அவர்கள் மணத் தம்பதிகள் ஆக ஒத்திகை செய்து கொள்கிறார்கள் எனறு நினைக்க நேர்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் வந்தால் ஒரு சிலர் குட்டிகளோடு வருவது உண்டு; அதாவது குழந்தை குட்டிகளோடு முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டு வந்து சேர்கின்றனர். ஐஸ்கிரீம், வேர்க்கடலை சுரு சுருப்புப் பெறுகிறது. அந்த உற்சாகமான சூழ்நிலையில் பின்சீட்டை மற்றொருவன் ஸ்கூட்டரில் பார்க்க நேர்ந்தது. அவளைப் பற்றிய அபிப்பிராயம் மாறத் தொடங்கியது; அதே அனுபவம் மற்றோர் முறையும் காணப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/14&oldid=806822" இலிருந்து மீள்விக்கப்பட்டது