பக்கம்:பரிசு மழை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 9 13 அந்தப் பிடிப்பின் கணவரை மற்றொருவர் "ட்ரைவின் அந்த இடத்தில் நேருக்குநேர் காணநேர்ந்தது. இது சன் டி.வி.யில் ஞாயிறு ஒன்பது மணிக்கு நடத்தும் நிகழ்ச்சி அல்ல; எதிர்பாராத சந்திப்பு; முன்பின் பேசியது இல்லை. ஒரே மேஜை நாற்காலிகள் காலியாக இருந்தன. அதனால் அடுத்து அடுத்து அமர நேர்ந்தது; அந்த உணவக 'சர்வர் ஒரே பில்லை இருவருக்கும் சேர்த்துத் தவறாகக் கொடுத்து விட்டான்; அதைப் பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மற்றவருக்கு அவரிடம் பேசவேண்டும்; நட்புறவு கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. "நான் தருகிறேன்; கொடுங்கள்” என்றார். "முன்பின் பழக்கம் இல்லை; நீங்கள் தருவது சரி {{s} f ; ந தருவது ச. அல்ல; அவனை வேறு பில் போடச் சொல்லலாம்" என்றார் முதல்வர். "உங்களை எனக்குத் தெரியும்; உங்களை ஸ்கூட்டரில் பலமுறை பார்த்திருக்கிறேன்" என்றார். இவர். அவர் மறுத்து விட்டார்; பில் வரும் வரை காத்திருக்க நேர்ந்தது. அவரைப் பழி வாங்க வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டது; பிறர் வருந்துவதும் சிலருக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதை வருத்தி மகிழ்வு காணல் என்று உளநூலார் கறுவர். 'உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன்; அதிர்ச்சி அடைய மாட்டீர்கள்” என்ற பீடிகையுடன் தொடர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/15&oldid=806824" இலிருந்து மீள்விக்கப்பட்டது