பக்கம்:பரிசு மழை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 107 அச்சிட ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது; அவர் தந்த பொருள் கொடையில் நூல் வெளி வந்தது. பத்திரிகை விமரிசனங்களுக்கு அனுப்பி வைத்தார். 'புதிய புத்தகம்' என்ற தலைப்பில் பத்திரிகைகள் அறிமுகம் செய்தன. "தாள் புதிது; அட்டைப்படம் புதிது கவர்ச்சியாக அச்சிடப்பட்டுள்ளது; இது பாராட்டத் தக்கது: இதைப் போல் நூல்கள் வெளியிடுவதைப் பாராட்டுகிறோம்" என்று எழுதிப் பாராட்டினர். அவர் இனி எந்த வரியும் எழுதி அச்சிடுவது இல்லை என்று தீர்மானம் செய்து கொண்டார். - 48. ஏக்கம் ஊனமுற்றோர்க்குச் சலுகைகள் தரப்படுகின்றன. தொலைபேசி "பூத்” பக்கத்தில் கால் ஒடிந்த நடராசர் ஒருவர் பேசுபவரிடம் காசு பறித்துக் கொண்டு இருந்தார். அவனுக்கு எப்படி இந்தச் சலுகை கிடைத்தது? இந்த இளைஞன் மட்டமான மார்க்குகள் வாங்கி எங்கும் போட்டிப் போட முடியாமல் பின் தங்கி நின்றான்; அவனும் தன்னை ஊனமுற்றவர்களில் ஒருவனாக ஏன் இந்தச் சலுகை வாரியங்கள் கருதக் கூடாது என்று ஒருவகையான ஏக்கம் கொண்டான். அவனைப் போல் தன் கால் முடமாகி இருந்தாலும் ஒரு இடம் கிடைக்குமே என்று வேடிக்கையாக எண்ணிப் பார்த்தான்; அவன் முடமாவதற்கு அவ்வளவு ஒன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/109&oldid=806775" இலிருந்து மீள்விக்கப்பட்டது