பக்கம்:பரிசு மழை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ல் டாக்டர் ரா. சீனிவாசன் எட்டவில்லை. செயற்கரிய செயல் ஏதாவது செய்ய வேண்டும் என்பது அவர் ஆவல். அவர் எழுதி வைத்த ஏட்டை அச்சிட அவர் பொருளாதாரம் இடம் தரவில்லை. பதிப்பகங்கள் அவர் எழுத்தை வெளியிட யாரும் முன்வரவில்லை. "இதை எல்லாம் யார் ஐயா படிக்கிறார்கள்?" என்ற வினாவை எழுப்பி அதற்கு விடை தேட அவரை அனுப்பி வைத்தனர். அச்சில் தன் எழுத்தைக் காண வேண்டும் என்ற பேராவலில் ஒரு நூல் எழுதினார். முதன் முதலில் கவிதையில் ஒரு காவியம் எழுதினார்; அது ஒரு பழைய புராணத்தின் நகல் போல் காணப்பட்டது. அது தோல்வி அடைந்தது; புதுக் கவிதையில் எழுத வேண்டும் என்று முனைந்தார்; அதற்குப் புதுக் கருத்துகள் தேவைப்பட்டன. சிறந்த கவிஞர்களும் எழுத்தாளர்களுமே புதுக் கருத்து களுக்குத் தவிக்கும் போது இவருக்கு எங்கே கிடைக்கப் போகிறது? தமிழ் நாட்டின் தேக்க நிலையைக் காட்டும் வகையில் தெய்வநூல்களுக்கு இன்று சந்தை இருக்கிறது என்பதை அறிந்தார்; அரசியல் மாற்றத்துக்கே கடவுள்தான் வந்து காப்பாற்ற வேண்டும் என்ற மனோபாவம் தோன்றிவிட்ட சூழ்நிலையில் இது ஒன்றும் புதுமை இல்லை; இது இந்த நாட்டு அவலநிலை. தெய்வ நூலே அவருக்குப் புகலிடம் தந்தது. பழந் தமிழில் பழைய செய்திகளை உரை நடையில் எழுதி முடித்தார். அச்சிட்டுத் தர ஒரு ஆஸ்தீகக் கொடை வள்ளல் கிடைத்தார்; அவருடைய நிழற்படம் அட்டையில் பின்புறம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/108&oldid=806774" இலிருந்து மீள்விக்கப்பட்டது