பக்கம்:பரிசு மழை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 105 "இன்று வாழ்க்கை அப்படியாகி விட்டது. இதுபோல் தினம் ஒரு கால் வரும்; இன்று மூன்று அழைப்புகள்." "எப்படி சமாளிப்பீர்?" "என் கணவரை டியூட்டிக்குப் போக வேண்டாம் என்று தடுத்துவைப்பேன்." "அப்படி ஒரு தடியன் வேறு இருக்கிறானா" "என்ன செய்வது? அது அவர் தொழில் கையில் தடி வைத்துக் கொண்டுதான் இருப்பார்; சில சமயம் துப்பாக்கியும் வைத்து இருப்பார்?" "யார் வீடு இது?" "சப் இன்ஸ்பெக்டர் இராமநாதன் வீடு” "அதை முதலிலேயே சொல்லி இருக்கக் கூடாதா?” "சொல்ல விட்டால்தானே" "ராங்க் நெம்பர்; கீழே வையுங்கள்" 47. பாராட்டு பழந்தமிழ்ப் புலவர் இவர்; அதாவது பழைய தமிழில் நூல் எழுதுவார். சங்கத் தமிழ்மாலையாக அவர் கட்டுரைகள் விளங்கின. அவர் தன்னை செஞ்சொற் கவி மழை என்று அடை கொடுத்துத் தன் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வார். அந்த அடைமொழி இல்லாமல் அவர் தன் பெயரை அச்சில் வெளியிடுவதே இல்லை. 'கலைமாமணி என்ற பட்டத்தை அவர் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்; அவர் புலமை அவ்வளவு தூரம் 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/107&oldid=806773" இலிருந்து மீள்விக்கப்பட்டது