பக்கம்:பரிசு மழை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ல் டாக்டர் ரா. சீனிவாசன் "நான்தான்; தனியாகத்தான் இருக்கிறேன்" "நல்லதாப் போச்சு! நான் சரியா ஒன்பது மணிக்கு வர்ரேன்; இரண்டு தடவை அமுக்குவேன்; நான்தான் என்று தெரிஞ்சுக்கலாம்; கதவைத் திறந்து விடுங்க" “எதுக்கு?" "அது உங்க வயசைப் பொறுத்தது" "நாற்பதைக் கடந்தவள்; எனக்கு யாரும் துணை இருக்க மாட்டார்கள்; தனியாத்தான் இருப்பேன்" "உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன்; உள்ளதைச் சுருட்டிக் கொள்வேன்; அவ்வளவுதான்" "முப்பதுக்குக் குறைவு" "உங்கள் பொளுளுக்கு எந்த ஆபத்தும் வராது; உங்க பொருளுக்கு ஆசைப்பட மாட்டேன்” "கட்டாயம் வந்து விடு; உனக்காகக் காத்து இருப்பேன்" இந்த வரவேற்புக் கிடைக்கும் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. "வேறு யாரும் அங்கு உன்னோடு இருக்க மாட்டார்களே” "சொல்ல முடியாது; நீ மூன்றாவது ஆள்; இது போல் போனில் பேசியது” "அவர்கள் யார்?" 'வந்த பிறகுதான் தெரியும்; உங்களில் யார் வல்லவர்களோ அவர்களுக்குத்தான் வெற்றி" "இது என்ன சினிமாக் கதையா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/106&oldid=806772" இலிருந்து மீள்விக்கப்பட்டது