பக்கம்:பரிசு மழை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 103 "சாதி செல்வாக்கு இருக்கிறது. வெற்றி உறுதி; அதுமட்டுமல்ல; எங்க சாதியிலே நான்தான் இந்த வட்டாரத்திலே முதல் பட்டதாரி' "கட்சியிலே டிக்கட் கிடைக்குமா?” 'அதற்கு நீங்கள் கொஞ்சம் பொருள் கடன் கொடுங்க, எல்லாம் சேர்த்து வட்டியும் அசலும் தந்துவிடுகிறேன்; உங்களுக்குப் பதவிக்கு வந்த பிறகு நன்றாகக் கவனித்துக் கொள்கிறேன் எல்லா டெண்டர்களும் உங்களுக்குத்தான்" "யோசனை பண்ணுங்க! இப்ப கையைச் சுட்டு கிட்டிங்க நாளைக்கு நீங்க ஜெயிக்கலாம்; ஆனால் வெடி குண்டு விபத்து கத்தி வெட்டு இதற்குத் தப்ப முடியுமா? யோசித்து இறங்குங்க காலம் அப்படி” "யோசிக்க வேண்டியதுதான்; நன்றி.” 46. தொலைபேசியில் ஒரு தொல்லை மணி அடித்தது. "ராங் கால்” "பரவாயில்லைங்க கால் வீணாகக் கூடாது; அதற்காக ஏதாவது பேசிவிடலாமுங்க” "சரி! உனக்கு என்ன வேனும்?" 'விளக்கமாச் சொல்லனும் ! நீங்க தனியா இருக்கிறீங்களா! கூட யாராவது இருக்காங்களா?" "உனக்கு எதுக்கு அது எல்லாம்?" "தெரிஞ்சுக்கனும்; அதுக்கப்புறம்தான் தெளிவாகப் பேச முடியும்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/105&oldid=806771" இலிருந்து மீள்விக்கப்பட்டது