பக்கம்:பரிசு மழை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 6 டாக்டர் ரா. சீனிவாசன் "நான் கொடுக்காமல் இருந்தால் நீ என்ன செய்திருப்பாய்?" என்று சற்று கர்வத்தோடு கேட்டார். "வேறு யாரிடமாவது கேட்டு முடித்து இருப்பேன்" என்று அமைதியாகக் கூறினான். 45. போனில் ஒரு டயலாக் "ஹல்லோ யார் பேசுவது? டைரக்டர் ஆறுமுகமா" "டைரக்டர்; பிரொடியூசர் எல்லாம் நான்தான்" "உங்கள் பட விவகாரமாகப் பேசவில்லை கடன் விவகாரமாகத்தான் பேசுகிறேன்" "ஒகோ பொருளாளரா! கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்; கொடுத்து விடுகிறேன்" "படம் என்ன ஆச்சு?" "கையைச் சுட்டுகிட்டேன்; டிஸ்ட்ரிபியூட்டர் யாரும் வருவதாக இல்லை. மார்க்கட்டு மந்தம்” "அப்படி ஒன்றும் இல்லை; உங்க படம்தான் ஏதோ குறை” "ஒரு வருஷத்துக்கு முன்பு ஆரம்பித்தோம்; அப்பொழுது அந்தக் கதைக்கு வரவேற்பு இருந்தது: ஒரு வருஷத்திலே ட்ரெண்டே மாறி விட்டது. இந்த மக்களை நம்பவே முடியறது இல்லை” "பின் என்னதான் செய்யப் போlங்க?" "தேர்தல் வருது, நிற்கலாம் என்று இருக்கிறேன்; எப்படியும் ஒரு மந்திரியாகிவிடலாம்; வாய்ப்பு இருக்கிறது" "எப்படிச் சொல்கிறீர்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/104&oldid=806770" இலிருந்து மீள்விக்கப்பட்டது