பக்கம்:பரிசு மழை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 101 "நீங்கள் வருகைப் பதிவேடு வைத்திருப்பீர்கள் என்பதை நான் எண்ணிப் பார்க்கவில்லை” என்றார் அவர். 44. சூடு தணிந்து விட்டது அவன் 'எடுபிடி வேலை செய்து உதவுவான்; அவனுக்கு ஒரு "கெடுபிடி" ஏற்பட்டது. அவன் தங்கைக்கு மணம் நிச்சயம் ஆகிவிட்டது. நாள் நெருங்கிக் கொண்டு இருந்தது. இடம் பிடித்து அட்வான்சு தர வேண்டும். கடன் உடன் வாங்கிக் கலியாணம் செய்து தீர வேண்டும். சீட்டு எடுக்கலாம் என்றால் அது எட்டாத உயர்த்துக்குச் சென்று கொண்டிருந்தது. சமயத்துக்குப் பணம் கிடைக்கவில்லை; இவனுக்குப் புகலிடமாக இந்த நண்பர்தான் கிடைத்தார். வெந்நீரைக் காலில் கொட்டிக் கொண்டதுபோல் துடி துடித்தார். "அவசரமாக ஐந்தாயிரம் வேண்டும்; சீட்டு எடுத்துக கொடுத்து விடுகிறேன்” என்றார். அவன் நல்லவன்; சமயத்துக்கு உதவுவான்; அவன் அவசரத்துக்கு உதவுவது கடமையாகப்பட்டது. இவர் கொஞ்சம் நல்ல மனிதர் ஆபத்துக்கு உதவுவது இல்லை பலர்; ஏதாவது சாக்குச் சொல்வார்கள். அந்தப் போக்கு இவருக்குப் பிடிக்கவில்லை; கொடுத்தார்; உதவினார்; அவன் கலியாணமும் ஒருவகையாக நடத்தி முடித்தான். பணமும் திருப்பிக் கொண்டு வந்து தந்து விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/103&oldid=806769" இலிருந்து மீள்விக்கப்பட்டது