பக்கம்:பரிசு மழை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 0 டாக்டர் ரா. சீனிவாசன் 43. வருகைப் பதிவேடு நண்பர் அவர்; அதனால் தன் மகனின் மணத்துக்கு அழைப்புத் தந்து இருந்தார். தான் சென்றால்தான் அந்த நிகழ்ச்சி நிறைவு பெறும் என்றால்தான் எந்த நிகழ்ச்சிக்கும் இவர் செல்வது வழக்கம். கும்பலில் யார் வந்தார்கள் யார் வரவில்லை ? எப்படிக் கவனிக்க முடியும்? "வந்தேன். உங்களைப் பார்க்க முடியவில்லை" என்று சொல்லி விடலாம் என்று போகாமல் இருந்து விட்டார். பிறகு அவரால் ஒரு காரியம் ஆக வேண்டி இருந்தது; எப்படி அவர் முகத்தில் விழிப்பது? சமாளித்துக் கொள்ளலாம் என்ற துணிவோடு அவர் வீட்டுக்குச் சென்றார்: "வாருங்கள்" என்று வரவேற்றார். "திருமணத்துக்கு வரவில்லையே?’ என்று கேட்டார். "நீங்கள் கவனிக்கவில்லை" என்று கூறிச் சமாளித்தார். "சாப்பிட்டீர்களா" "ஒகோ பிரமாதம்” என்று கஷ்டப்பட்டு அந்தப் பொய்யைக் கூறினார். இருவரும் சோபாவிற் அமர்ந்தனர். முன் டி.வி. ஒடிக் கொண்டிருந்தது; வி.சி.ஆர் அதில் ஒரு காசெட செருகினார். அந்த விருந்தில் பட்டுப்புடவை கட்டிக் கொண்டு வந்தவர்கள் தொட்டுச் சுவைப்பதைக் காட்டினார். அங்கவஸ்திரங்களையும் காட்டினர்; ஜிப்பா அணிந்த ஆள் யாரும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/102&oldid=806768" இலிருந்து மீள்விக்கப்பட்டது