பக்கம்:பரிசு மழை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 99 'இதோ பாரு: என் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகிறாய்; விட்டு விடு; மன்னித்து விடுகிறேன்" என்றான் அவன் . “உங்களுக்குக் 'குரங்கும் தொப்பியும்” கதை தெரியுமா?" என்று கேட்டாள். "தெரியும்" “மரத்தில் ஏறிக் கொண்ட குரங்கு தொப்பியைத் தன் தலையில் மாட்டிக் கொண்டது; அது கீழே போட ஒரு உபாயம்; அது பார்க்கும்படி இந்த வியாபாரி தலையில் ஒரு தொப்பி அணிகிறான்" "தெரியும்; அந்தத் தொப்பியை வீசிக் கீழே எறிகிறான்; அந்தக் குரங்கும் தொப்பியைக் கீழே தூக்கி எறிகிறது" "நீங்கள் அணிந்திருக்கும் தொப்பியைக் கீழே போடுங்கள்; நான் தூக்கி எறிந்து விடுகிறேன்" என்றாள். அந்தப் பெரிய வீட்டுப் பக்கம் அவன் போவதை நிறுத்திக் கொண்டான். "இந்தக் கற்பனையை யார் அவளுக்குக் கற்றுக் கொடுத்தது?" அவனை வராமல் தடுக்கப் பெரிய வீட்டில் வாழும் சின்ன அம்மாதான். அவர்கள்தான் இந்தக் கற்பனையை இவா மனைவிக்கு உபதேசித்தாள். அவன் திருந்திய பிறகு அவனுக்கு அது அவள் அமைத்த சிறுகதை என்பதைத் தெரிவித்தாள். கற்பனை பயன் கொடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/101&oldid=806767" இலிருந்து மீள்விக்கப்பட்டது