பக்கம்:பரிசு மழை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 109 முதலில் எந்தப் படங்களை மாட்டுவது? இதுதான் அவருக்கு எழுந்த பிரச்சனை. நடிகை நட்சத்திரத்தை மாதிரிக்கு மின்ன வைத்தார். "யார் இவர்?" "புது நடிகை வடநாட்டில் இருந்து இங்கு வந்து நமக்கு மகிழ்வு அளிக்கிறாள்" என்றார். "தமிழ் நடிகைப் படம் மாட்டி வையுங்கள்; அது உங்கள் தன்மான உணர்வுக்கு அறிவிப்பாக இருக்கும்" என்றனர். "சரி என்று ஒப்புக் கொண்டார்; தமிழ் நடிகையில் யாரை மாட்டுவது?" அவரால் இன்னும் முடிவு செய்ய இயலவில்லை. குஷ்பு முன்னால் பேசப்பட்டவள்; அவள் பெயர் அடிபடுவது நின்றுவிட்டது; அவளும் தமிழ் நடிகை அல்ல என்று தெரிந்தது. காந்தியின் படம் மாட்டினார். அவர் சிரித்துக் கொண்டே இருந்தார். "நீ பொய் சொல்கிறாய்! அதை நீ விட முடியுமா?" என்று கேட்பது போல் இருந்தது. "முயற்சிக்கிறேன்" என்று அதற்கு அவர் பதில் சொன்னார். காமராசர், அண்ணா, பெரியார் இவர்களை மதித்தார். மூன்று படங்கள் சுவரை நிரப்பின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/111&oldid=806778" இலிருந்து மீள்விக்கப்பட்டது