பக்கம்:பரிசு மழை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 0 டாக்டர் ரா. சீனிவாசன் அரசியலில் மக்கள் தலைவர்களாக இருப்பவர்களின் படங்களை மாட்டுவதில் அவருக்குப் பிரச்சனை எழுந்தது. ஆளும் கட்சிப் படம் மட்டும் மாட்டி வைத்தார். "எதிர்க்கட்சிக் காரர்கள் எதிர்ப்புகள் தெரிவித்தனர்; அவர்களும் இவருக்கு வேண்டியவர்கள்; அதனால் அதற்கு மதிப்புத் தந்தார். ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்கள் படங்களையும் மாட்டி வைத்தார். அது வீடாகக் காட்சி தரவில்லை. ஒரு சமூகக் கூடமாகக் காட்சி அளித்தது. யாரும் அங்கே என்ன படம் இருக்கிறது என்பதைக் கவனிப்பது இல்லை; பழகி விட்டது. தனித்துவம் எதுவும் தெரியவில்லை. சில இடங்கள் காலியாக வைத்தார் "யாருக்கு? ஏன்” என்ற கேள்வி பிறந்தது. "புதிய தலைவர்கள் உருவாகிக் கொண்டிருக் கிறார்கள்; அவர்களுக்கு" என்றார். அவர் தீர்க்க தரிசனம் கண்டு நண்பர்கள் பாராட்டினார்கள். . "உங்களுக்கு என்ற கொள்கை எதுவும் இல்லையா?” “யாரையும் பகைத்துக் கொள்ளாததுதான் நம் கொள்கை", “தேர்தல் காலங்களில்?” "கேட்பவர்க்கு நிதி தருவேன்; பேதம் பாராட்டுவது இல்லை”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/112&oldid=806779" இலிருந்து மீள்விக்கப்பட்டது