பக்கம்:பரிசு மழை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 111 "வோட்டு” "அது மட்டும் என் சொந்த விஷயம்; அதை யாருக்கும் வெளிப்படுத்த மாட்டேன்” என்றார். 50. புதிய பரிமாணம் அவர் தன் மகனுக்கு ஒரு மகளைத் தேடிக் கொண்டு இருந்தார்; மகள் என்றால் தவறாகக் கொள்ள வேண்டாம்: மருமகளைத் தேடினார். அவள் இவர் வீட்டுக்கு வரும்வரை வெறும் மகள்தான்; அதனால்தான் மகள் என்று குறிப்பிட வேண்டியது ஆகிறது. அவருடைய அளவு கோல்கள் சாதாரண மானவையே பையனுக்கு படிப்பு இருந்தது; அவன் பட்டம் வாங்கவில்லை; குடும்ப நிறுவனம் ஒன்று இருக்கிறது; அதை அவன் நிர்வகிக்கிறான். திறமைசாலி, புத்திசாலி, தனவான்; குணவான் எல்லாம் இருந்தது. அவனுக்காக அவர் தேடியது அவனிடம் இல்லாத ஒன்று; அவள் அழகாக இருக்க வேண்டும் என்பது; எல்லாம் இருக்கிறது, பெண் நிறம் இல்லை என்றால் தரம் அன்று என்று தள்ளி வந்தார். கடைசியில் அவர் ஒரு பெண்ணைத் தேர்ந்து எடுத்தார்; அவர்களுக்குப் பணம் இல்லை; மனத்தைச் சமாதானப் படுத்திக் கொள்ள அவர்களிடம் குணம் இருந்தது. அந்தப் பெண்ணுக்கு அவனைப் பிடித்து விட்டது; காரணம் அவளால் அதற்குமேல் காத்திருக்க விருபபம் இல்லை. அந்தப் பெண் வீடு அவ்வளவாக வசதி உடையவராகத் தென்படவில்லை. அதைப் பற்றி அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/113&oldid=806780" இலிருந்து மீள்விக்கப்பட்டது