பக்கம்:பரிசு மழை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 6 டாக்டர் ரா. சீனிவாசன் விமரிசிக்கவில்லை "இவ்வளவு தாழ்ந்து நாம் போகத் தேவை இல்லை" என்று கூறினார். "ஏன் எதைப் பார்த்து இப்படிக் கூறுகிறீர்? கார் இல்லை என்பதாலேயா?” - "அது கூட நாம் வாங்கிக் கொடுத்து விடலாம்; போன் இல்லை; அவர்களோடு பேச்சு வார்த்தை நிகழ்த்த முடியாதே" என்றார். "பேச்சு வார்த்தைதான் இப்பொழுதே முடிந்து விடுகிறதே?” "பின்னால் அவர்களோடு தொடர்பு கொள்ளத் தேவைப்படுமே” என்றார். "அவர்கள் எழுதிப் போட்டு இருக்கிறார்கள்! வெயிட்டிங்க் லிஸ்டில் இருக்கிறதாம்; வந்து விடும் என்று சொல்கிறார்கள்”. "அதுவரை நாமும் காத்திருப்போம்” என்று கூறி விட்டார். "அது அவ்வளவு முக்கியமா ?” என்று கேட்கப்பட்டது. "யாராவது கேட்டால் என்ன சொல்வது? போன் கூட இல்லை என்றால் எங்களை மதிக்க மாட்டார்களே” என்று விளக்கம் தந்தார். அந்தஸ்த்தின் அளவு கோல் தொலைபேசி என்பதை அவர் பேச்சால் உணர முடிந்தது; இது ஒரு புதிய பரிமாணமாகத் தென்பட்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/114&oldid=806781" இலிருந்து மீள்விக்கப்பட்டது