பக்கம்:பரிசு மழை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 8 113 இந்த நாட்டில் சாதனமாக இருப்பவை எல்லாம் மதிப்பீட்டின் அளவு கோல்களாக அமைந்து வருகின்றன. அவற்றில் இதுவும் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டது. 51. பிரிவினை கூடாது 'மங்கலம் என்ப மனைமர்ட்சி' என்று அன்று வள்ளுவர் கூறினார்; அந்த அம்மையார் அதற்கு அடையாளமாகப் பூவும் பொட்டுமாகக் காட்சி அளித்தார். அவரோடு மற்றொரு அம்மையார் செல்வது வழக்கம்: அவர் தமக்கு இருக்கும் இயற்கைப் பொலிவைக் கூட்டிக் கொள்ள வண்ணத்துகளும் பூசிக் கொள்ளவில்லை; சுண்ணத்துகளும் தேடிக் கொள்ளவில்லை; பூவை மறந்த பூவையளாகக் காட்சி தந்தாள்: சாலையில் அவர்கள் இரட்டையராகச் சென்று கொண்டிருந்தனர். ஒரிருநாள் அந்தப் பூ மாதேவி அவரோடு இல்லை; இந்தப் பூவை மட்டும் சென்று கொண்டிருந்தாள். அவர்களைப் பார்த்துப் பேச வேண்டும் என்ற தேவை பிறந்தது. "மணி என்ன ?" என்று கேட்டு வைத்தோம்; அவர்கள் கையைப் பார்த்துப் "பத்து” என்றனர். 'உம் உடன் வருவாரே அந்தப் பூமாதேவி காணப்படவில்லையே” என்று கேட்டு வைத்தோம். "பூமாதேவியா? அப்படி யாரும் இல்லையே? "பூதேவி" என்றேன் "சீதேவிதான் தெரியும்; இது என்ன பூதேவி_?" என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/115&oldid=806782" இலிருந்து மீள்விக்கப்பட்டது