பக்கம்:பரிசு மழை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 டாக்டர் ரா. சீனிவாசன் “பூவும் பொட்டுமாகச் செல்வார்கள் அவர்கள் எங்கே?' என்று கேட்டோம். "அவள் கணவருக்கு நேற்று தலைதிவஷம்; அதனால் வரவில்லை” "உங்களைப் போல அவளும் ஒரு விதவையா?" என்று கேட்டு விட்டோம். "நான் விதவை அல்ல; என் கணவர் இருக்கிறார்" என்று பதில் சொன்னாள். "பூவும் பொட்டும்?" அந்தப் பிரிவினை தேவை இல்லை. எல்லாம் பழக்கம் தான் காரணம்; அவருக்கு விட முடியவில்லை; என்னால் இட விருப்பமில்லை; அவ்வளவுதான்" என்றாள் அந்தச் சீதேவி. 52. யாருமே சாகக் கூடாது அவன் எட்டாம் வகுப்பு மாணவன், சேட்டு வீட்டுப் பையன்; அவன் வீட்டு மொழி இந்தி, பேசும் மொழி தமிழ், அதில் வட நாட்டுப் பண் கூடி இருந்தது; தமிழ்ச் சொற்களை இந்தி வாக்கியத்தில் வைத்துப் பேசினான். நமக்கு என்பதை நம்பள்கு' என்று திரித்துப் பேசினான் இவன் இங்கு வந்து ஐந்து வருஷம் ஆகிறது. என்றாலும் தமிழ் அவனோடு ஒட்ட மறுத்தது. அவன் எப்பொழுதும் சுரு சுருப்பாகப் பேசுவான். நல்லதுக்கும் விடுமுறை விடுகிறார்கள். அல்லதுக்கும் விடுமுறை தருகிறார்கள். அவர்கள் பள்ளிக் கூடப் பேர்உந்தி ஒரு சிலரைப் பள்ளத்தில் வீழ்த்தி அள்ளிக் கொடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/116&oldid=806783" இலிருந்து மீள்விக்கப்பட்டது