பக்கம்:பரிசு மழை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 8 115 விட்டது. மருத்துவ மனையில் அவர்கள் அனுமதிக்கப் பட்டுத் திருத்தம் பெற்று வந்தனர். ஒருவன் மட்டும் மருத்துவத்துக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டான். "எக்சர்ஷன் சென்ற இடத்திலேயே அவனை "எக்சகவேட் செய்து புதைத்து விட்டு அனுதாபச் செய்தி ஒன்று எழுதிக் கல்லில் பொறித்துவிட்டு வந்தனர். இந்த சேட்டுப் பையன் அந்தப் பள்ளியில் படிக்கிறான். இறந்து விட்ட பையனின் அவலச் செய்தியைச் சோகம் கூட்டிப் பேசினான். "அந்த வீட்டுக்கு அவன் ஒரே பையன்; அவன் அம்மா அப்பா துடிதுடித்துப் போனார்கள்; அந்த வீடு படா சோகம் ஆகிவிட்டது" என்றான் "நீ செத்து இருக்கலாம்; நீ உங்கள் வீட்டுக்கு எத்தனையாவது பிள்ளை ?" என்று கேட்டு வைத்தோம். "நான் மூத்த பையன்; எனக்குத் தம்பி தங்கையர் நான்குபேர் இருக்கிறார்கள். என் அப்பா செத்து விட்டால் நான்தான் அவர்களைக் கவனிக்க வேண்டும்; நான் என் வீட்டுக்கு மிகவும் அவசியம்” என்றான். "யாருமே சாகக் கூடாது" என்று நாம் அவனுக்குப் பதில் சொன்னோம். 'யார் செத்தாலும் துக்கம் துக்கம்தான்” என்றோம். 53. ஒய்வு ஊதியம் அவர் பத்தாயிரத்துக்கு மேல் வாங்கிக் கொண்டு இருந்தார். ஒய்வு பெற்றதும் அவருக்கு அதில் பாதி அளவு கிடைத்தது. காற்று இருந்த போது தூற்றிக் கொண்டவர்; பற்றாக்குறை என்பது அவரைப் பற்றவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/117&oldid=806784" இலிருந்து மீள்விக்கப்பட்டது