பக்கம்:பரிசு மழை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 டாக்டர் ரா. சீனிவாசன் வேலை செய்யும் நாட்களில் அவரைப் பாதசாரியாகப் பார்த்தது இல்லை. காரைவிட்டு இறங்கும் போதுதான் அவர் கால்கள் பூமியில் படிந்தன. அதற்கு முன் அவர் தேவலோக வாசிதான்; தேவர்கள் கால்கள் பூமியில் படிவது இல்லை என்று கூறுகிறார்கள். இவரை இன்று கடைகளில் கொசுறுவதைப் பார்க்கலாம்; பால் பூத்துக்கு' இவர் காலையில் சென்று விடுகிறார். கியூவில் நிற்கும் இடங்களில் எல்லாம் அவர் கியூவில் நிற்கிறார். "ஏன் வேலைக்காரன் என்ன ஆனான்?" "அவனை நிறுத்திவிட்டேன்" "அவனுக்கு என்ன கொடுத்தீர்கள்?" "ஐந்நூறு; இப்பொழுது அதனை மிச்சப்படுத்தி விட்டோம்; அந்த வேலைகள் எல்லாம். நானே செய்து விடுகிறேன்" என்று தன் விளக்கம் தந்தார். பத்தாயிரம் சம்பாதித்தவர் இன்று ஐந்நூறுக்கு வேலை செய்கிறார்; இது தாழ்வா உயர்வா? தெரியவில்லை. "எனக்கு வேலை வேண்டும்" என்கிறார். இன்று இவர் இதைத்தானா செய்யவேண்டும்? தெரியவில்லை; சிந்தித்துக் கூறுங்கள். 54. அவள் வைத்த தேர்வு "காதல் எங்கள் வளர்ப்புரிமை” என்று திரைப்படக் கலாச்சாரம் இன்று இளைய தலைமுறைக்கு அறிவுறுத்துகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/118&oldid=806785" இலிருந்து மீள்விக்கப்பட்டது