பக்கம்:பரிசு மழை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 117 'மனித உரிமைகளுள் வாழ்க்கைத் தலைவனைத் தேர்ந்து எடுக்கும் உரிமை எனக்கு உண்டு” என்று பேசுகிறாள் பத்மினி. "யார் அவளைத் தடுக்க முடியும்?" கல்வி அந்தப் புதிய உரிமையை அளித்தது; படித்தபின் அவளை அடக்கமாக வீட்டில் முடக்கி வைத்தனர். கிடைத்த சந்தர்ப்பங்கள் பலவற்றை அவள் இழந்து விட்டாள்; அந்த வருத்தம் அவளை உறுத்தியது. படிக்கும் போது அந்த விஷயத்துக்கு அவள் முதலிடம் கொடுக்கவில்லை. இந்தப் பரிட்சைகள் எங்கே அவளைக் காதலிக்க விடுகிறது? பாடங்களைப் படித்து மனப் பாடம் பண்ணுவதற்கே நேரம் இல்லை; வலிய வருகிற கால்பந்து ஆட்டக்காரர்களை அவள் ஒதுக்கிவிட்டாள். எப்படியோ அந்தப் பழைய தொடர்பு துளிர்க்க ஆரம்பித்தது; வேலை தேடும் படலத்தில் அந்தக் குறும்பனைச் சந்திக்க நேர்ந்தது. அதற்குப் பின் அவனைச் சந்திப்பதற்காகவே இவள் பல வேலை இண்டெர்வியூக்குச் சென்று வந்தாள் வேலை கிடைக்கவில்லை; சிரித்துப் பேசிக் காதலை வளர்த்துக் கொள்ள முடிந்தது. காதலை எப்படி வளர்ப்பது? என்று எந்த நூலும் யாரும் இதுவரை எழுதவில்லை. அது அவர்களுக்குத் தேவை இல்லை. அவர்களே படிப்படியாக வளர்த்துக் கொண்டார்கள். முதலில் கண்கள் பேசின; இதழ்கள் பேச அவள் இடம் தரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/119&oldid=806786" இலிருந்து மீள்விக்கப்பட்டது