பக்கம்:பரிசு மழை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 8 டாக்டர் ரா. சீனிவாசன் அவன் அவசரப்பட்டு விட்டான். தொடக்கூடாது என்று அவள் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்; தொட்டாலும் பரவாயில்லை; அவன் அதற்கு என்ற வரையறை செய்யப்பட்ட விளையாட்டை மீறிச் செயல்பட்டான்; அது தவறான விளையாட்டு என்று அவளுக்குப் பட்டது. கன்னத்தில் ஓங்கி அறை விட்டாள் அவன் எதிர் பார்க்கவில்லை. ஏசுநாதரின் பொன் மொழி அவனுக்கு உறுதுணையாயிற்று. அடுத்த கன்னத்தைக் காட்டினான்; அவள் அவனை அணைத்து ஆதரவு தந்தாள் என்று பின் தெரிந்தது. "ஏன் என்னை அடித்தாய்?" என்று அவள் சோறு ஆக்கிப் போட அதனை உண்ணுகின்ற அன்றாட நிகழ்ச்சிகளில் அவன் கேட்டு வைத்தான். "அந்த அறை சரித்திர முக்கியத்துவம் உடையது; உன் பொறுமை என்னைக் கவர்ந்தது; வாழ்க்கையில் பொறுமை மிகவும் தேவை. நான் காலமெல்லாம் சமைத்துப் போட வேண்டும்; கல் இருந்தாலும் சோற்றிலிருந்து எடுத்துப் போட்டுவிட்டு மெல்லும் சூழ்நிலைகள் ஏற்படும். அதற்கு உனக்குத் தகுதி இருக்கிறதா என்று ஆராய்ந்தேன். அந்த ஆராய்ச்சிதான் அது. நீ தேர்வில் வெற்றி பெற்று விட்டாய்" என்ற சிரித்துக் கொண்டே சொன்னாள்; அவர்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமைந்தது; விரிசல்கள் எழவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/120&oldid=806788" இலிருந்து மீள்விக்கப்பட்டது