பக்கம்:பரிசு மழை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 119 55. சாதனை "அந்த வீடு திருடனிடம் கொடுத்தால் கூட பத்துக்குக் குறையாது" என்று அதைப் பற்றி மதிப்பீடு செய்யப்பட்டது. அதாவது எதையும் தராமல் கொள்ளையடிக்கும் தொழிலாளி அவன்; அவனே பத்து லட்சம் தருவான் என்றால் அதன் மதிப்பு இருபதுக்குக் குறையாது என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட மதிப்பீடு. அவசர நிமித்தமாக அவர் ஐம்பதினாயிரம் கை நீட்டி வாங்கி விட்டார். அப்பொழுது அந்த வீட்டுக்கு அவ்வளவு மதிப்பு இல்லை. எல்லாம் ஒரு வருஷத்திலே அது இருபது லட்சத்துக்கு உயர்ந்து விட்டது. அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. வீட்டை விற்பது என்று முடிவுக்கு வந்தார் ஐந்து லட்சம் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒரு வருஷம் காலம் அளிக்கப்பட்டது. அக்கிரிமெண்டு காலாவதி ஆகிவிட்டது என்று கூறுகிறார்கள். உரிய காலத்தில் பதிவு செய்யப்படவில்லை. இருவருக்கும் தகராறு என்று கூறுகிறார்கள். ஒப்பந்தக்காரன் அந்த வீட்டில் குடிபுகுந்து விட்டான்; அவன் வீடு தனக்கு விற்பனை செய்துதான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தினான். சட்டசபைக்கு இருவரும் போக நேர்ந்தது. இருபது லட்சத்துக்கு ஆள் கிடைத்தார்கள்; கழுகுகள் அந்த வீட்டைச் சுற்றி வட்டமிட்டன. வாங்குவதற்கு எல்லோரும் தயாராக இருந்தார்கள்; ஆனால் ஒன்று; அவனைக் காலி செய்து தர வேண்டும். அதற்கும் சட்டப் பிழைப்பாளர்கள் உறுதி தந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/121&oldid=806789" இலிருந்து மீள்விக்கப்பட்டது