பக்கம்:பரிசு மழை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 டாக்டர் ரா. சீனிவாசன் அவனைப்பற்றி ஒரு வதந்தி பரவியது: "அவன் இதுவரை ஐந்து கொலைகள்தான் செய்திருக்கிறான்; அதற்கு மேல் போகவில்லை" என்று செய்தி பரவியது. ஒப்பந்தம் நிறைவேறியது; ஐந்து லட்சத்துக்கே அவனுக்கு விற்க நேர்ந்தது. அந்தக் கொலையாளியை நாம் பார்க்க வேண்டும் என்று விரும்பினோம். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரை விசாரித்தோம். "நான் இதுவரை ஒரு முட்டைப் பூச்சியைக் .ேட கொன்றது இல்லை; நசுக்கி இருக்கிறேன்; அது தானே செத்து விடும்” என்றான். "இந்தச் செய்தி" “வதந்தி; அதை நானே கிளப்பி விட்டேன்; அதனால் தான் இந்த வீட்டை வாங்க முடிந்தது; சட்டம் பேசியவர்கள் எல்லாம் விலகி விட்டார்கள்; விற்றவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றினார்" என்று விளக்கம் தந்தான். இவன் ஒரு சாதனையாளன் என்று மதிப்பிட முடிந்தது. 56. தேவையற்ற தேவை அவர்கள் அப்பா அவர்களைப் புத்தகக் கண் காட்சிக்கு அழைத்துச் சென்றார். மூத்தவன் எட்டாம் வகுப்பு: விடுமுறை; ஆங்கிலப் பள்ளி, அதனால் ஸ்டோரி புக் கேட்டான். இரண்டு புத்தகங்களோடு வீடு திரும்பினர். வீட்டை அடைந்ததும் ஒரு அலறல் எழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/122&oldid=806790" இலிருந்து மீள்விக்கப்பட்டது