பக்கம்:பரிசு மழை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 121 அது அவன் தங்கை எழுப்பியது. அழுகையை நிறுத்த வில்லை. "பொம்மை" என்று பொருமி அழுதாள். நேற்றுதானே வாங்கிக் கொடுத்தேன்; இதற்குள் இன்னொரு பொம்மையா?" "இரண்டு வேண்டும்" "என்ன பொம்மை வேண்டும்?" "ஏதாவது, இரண்டு" என்றாள். வேறு வழியில்லை; இரண்டு பொம்மைகளை வாங்கி வந்து தந்தார்; அழுகை நின்றது; சுரம் தணிந்தது. பழைய நிலைக்கு வந்து சேர்ந்தாள். "ஏன்'மா இப்படி அழுதாய்? ஏன் இரண்டு பொம்மைகள் கேட்டாய்?" என்று அமைதி திரும்பியதும் கேள்விகள் கேட்கப்பட்டன. "அண்ணனுக்கு இரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார் அப்பா; எனக்கு ஒன்றும் வாங்கித் தரவில்லை". "அவன் படிக்கிறான்; படிப்பதற்கு" என்றனர். "அதுவும் பொம்மை புத்தகம் தான்; கதைப் புத்தகம்” என்றாள். அவளைப் பொறுத்தவரை அது தேவையற்ற தேவை என்பதை உணர்ந்தனர். 57. செய்தி ஒன்றுதான் காலையில் அவன் கதவின் முன் நின்றான்; நேரம் ஒன்பது இருக்கும்; முள் பன்னிரண்டைத் தொடவில்லை. 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/123&oldid=806792" இலிருந்து மீள்விக்கப்பட்டது