பக்கம்:பரிசு மழை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 , டாக்டர் ரா. சீனிவாசன் தொட்டுக் கொள்ள நெருங்கிக் கொண்டு இருந்தது; அவன் வந்து நிற்கிறான்; கடிகாரம் ஒன்பதைத் தொடுகிறது. "அடிபட்டு விட்டது; சாலையை அவர் கடந்து கொண்டு இருந்தார்; அதற்குள் கார் வந்து மோதி விட்டது" என்றான். கேட்டதும் அந்த அம்மையாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. "பாவி மனுஷன் பார்த்து நடக்கக் கூடாதா?" என்று அங்கலாய்த்தார். "ஆஸ்பத்திரிக்கு உடனே எடுத்துச் சென்றார்கள். தையல் போட்டிருக்கிறார்கள். ஒரே ரத்தம், நல்ல காலம் உயிர் பிழைத்தது" என்றான். இந்த அம்மையாருக்குக் கை ஓடவில்லை; கால் ஓடவில்லை. வெலவெலத்துப் போய்விட்டார். "அவர் இன்று வேலைக்கு வரமாட்டார்; அம்மா சொல்லச் சொன்னார்கள்” என்று முடித்தான். அப்புறம்தான் தெரிந்தது; செய்தி தன் கணவரைப் பற்றி அல்ல என்பது. டிரைவரைப்பற்றியது; அந்தப் பையன் டிரைவரின் மகன். "அடப்பாவி! அதை முதலிலேயே சொல்லித் தொலைத்து இருக்கக் கூடாதா? பயந்தே போய்விட்டேன்" என்று கூறி ஒரு நிலைக்கு வந்து சேர்ந்தார் அந்த அம்மையார். விசாரித்ததில் அந்த அம்மையாரின் கணவர் காலையில் நடப்பதற்கு வெளியே சென்றிருந்தார் என்பது தெரிந்தது. ஒன்பது பத்துக்கு அவர் வீடு வந்து சேர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/124&oldid=806794" இலிருந்து மீள்விக்கப்பட்டது