பக்கம்:பரிசு மழை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 123 இந்த அம்மையார் அவரை ஏற இறங்கப் பார்த்தார். கட்டு எதுவும் இல்லை; கட்டுக் குலையாமல் இருந்தார். 'பயந்து போய்விட்டேன்' என்றார் அந்த அம்மையார். "டிரைவர் பையன் சொன்னான்" அந்த அம்மையார் சொல்லி முடிப்பதற்கு முன் அவர் சொல்லி முடித்தார். "சாலையைக் கடந்தேன்; நல்ல காலம்; கார் மோதி இருக்கும்; மயிர் இழையில் உயிர் பிழைத்தேன்' என்றார். "டிரைவரும் மயிர் இழையில்தான் பிழைத்திருக் கிறானாம்; இன்று அவன் வரமாட்டான்” என்று முடித்தார். 58. கெடுபிடிகள் "ஐயா! நீர்தானா ஈசன்?" "ஆமாம்” “உங்களைப் பற்றி விசாரிக்க வந்திருக்கிறேன்' இவருக்கு பயம் உண்டாகியது. தான் யாரையும் அடிக்கச் சொன்னது இல்லை; யாரோ அடித்துக் கொலை செய்து விட்டு இவர் தூண்டியதாகச் சொல்லி இருக்கிறார் என்று யூகித்தார். "நான் யாரையும் அடிக்கச் சொன்னதில்லை” "நீர் சொல்லித்தான் அடிக்க வேண்டும் என்பது இல்லை. அவனவன் அடித்துக் கொண்டுதான் இருக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/125&oldid=806796" இலிருந்து மீள்விக்கப்பட்டது