பக்கம்:பரிசு மழை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ல் டாக்டர் ரா. சீனிவாசன் கள்ள நோட்டுகள்; அதை யாரும் தடுக்க முடியாது” என்றார். கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டார். "உங்களுக்கு உங்கள் பேரில் வங்கிக் கணக்கு இருக்கிறதா?" என்பது அடுத்த கேள்வி. வருமான வரித் துறையார் கேள்வி போல் இருந்தது. "அதிகம் இல்லை” "இருக்கிறதா? இல்லையா? கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்" என்று வற்புறுத்தினார். நீதிமன்றம் போல் இருந்தது அந்த விசாரணை. "ரேஷன் கார்டில் உங்கள் பெயர் இருக்கிறதா "இல்லை" "நீர்தானே குடும்பத்தலைவர்?" வேறு ஒருவர் இருந்தார்; அவர் பெயர்தான் இருக்கிறது. அவரை டைவர்சு செய்து விட்டார்கள். என்னை இரண்டாம் தாரமாக மணம் செய்து கொண்டிருக் கிறார்; நான் புதிதாகக் குடியேறியவன்; என் பெயர் அதில் இல்லை; இனிமேல்தான் மாற்றிக் கொள்ள வேண்டும்; அதுவரையில் நான் இருக்க வேண்டும்; வேறு ஆள் வந்து விட்டால் மாற்றப் பயன் இருக்காது" என்று எதையும் மறைக்காமல் சொன்னார். "இது நடிகையின் வீடா?" "அப்படி ஒன்றும் இல்லை; இன்று பலரும் அவர்கள் பாதையைப் பின்பற்றுகிறார்கள்" என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/126&oldid=806798" இலிருந்து மீள்விக்கப்பட்டது