பக்கம்:பரிசு மழை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 125 "சிறு தொழில் பதிவு நிறுவனத்தில் பதிவு செய்து இருக்கிறீர்களா?" 'மணப்பதிவு நிறுவனத்தில் பதிவு செய்து இருக்கிறோம்" "அது அல்ல, ஈசன் நிறுவனம்' என்று ஒரு நிறுவனம் தொடங்கி இருக்கிறீர்களே அது குறித்து ஒரு பதிவு அஞ்சல் வந்திருக்கிறது. அதை உங்களிடம் சேர்க்க வேண்டும்; அஞ்சல் துறை ஆய்வாளர் நான்; முதல் கடிதமாக இருந்தால் விசாரித்துத்தான் தரவேண்டும்" "ஆரம்பமே இப்படி என்றால் இந்தத் தொழில் நடத்துவதற்கு எத்தனை அதிகாரிகளைச் சந்திக்க வேண்டுமோ இந்தக் கடிதமே வேண்டாம்; திருப்பி அனுப்பி விடுங்கள்" என்றார். 59. மழலைச் சொற்கள் அவன் மழலைச் சொற்களைக் கேட்பதில் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவனிடம் பேசுவதற்கு இரண்டு சொற்களைத் தேர்ந்து எடுத்தார்; அவை திரைப்படத்தில் இருந்து எடுக்கப் பட்டவை. போடா என்பது ஒன்று மடையா என்பது மற்றொன்று. அதை அவர் தனித் தனியாகச் சொல்லிக் கொடுத்தார்; அவன் சேர்த்து ஒரே தொடராகக் கூறினான். "போடா! மடையா!' என்றான். தான் செய்த தவறை உணர்ந்தார்; வேற புதிய சொற்களைத் தேர்ந்து எடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/127&oldid=806799" இலிருந்து மீள்விக்கப்பட்டது