பக்கம்:பரிசு மழை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 9 127 நம் பையனுக்குத் தமிழ் மொழிதான் தாய் மொழியாக இருக்கிறது. அதனால் அவனுக்கு இலக்கண விளக்கம் தெரிய வேண்டும் என்பது இல்லை. தமிழ் ஆசிரியர் அவனை ஒரு கேள்வி கேட்டு வைத்தார் வகுப்பில். "ஆகுபெயருக்கும் அன்மொழித் தொகைக்கும் உள்ள வேறுபாடு யாது” என்று கேட்டு விட்டார். அவன் வீட்டில் வந்து நம்மைத் தொளைக்க ஆரம்பித்தான். "அவரையே கேட்டு அறிந்துவா” என்று சொல்லி அனுப்பினோம். அவர், "அதைப்பற்றி ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்றார் அன்று. இன்று இருபது ஆண்டுகள் கழித்து அவர் நம்மைச் சந்திக்கிறார். "வேலையை இராஜினாமா செய்து விட்டேன்” என்று தெரிவிக்கிறார். ஏதோ மானப்பிரச்சனையாக இருக்கும் என்று அனுமானிக்க நேர்ந்தது. "என்ன சார்! யாருடனாவது சண்டை போட்டுக் கொண்டீர்களா? என்று கேட்க நேர்ந்தது. "இல்லை; என் பெண் வயசுக்கு வந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன" என்றார். "என்ன ஆண்டு விழா நடத்த இருக்கிறீர்களா?" "பெண்ணுக்குக் கலியான வயது என்ன? சொல்ல முடியுமா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/129&oldid=806803" இலிருந்து மீள்விக்கப்பட்டது