பக்கம்:பரிசு மழை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 டாக்டர் ரா. சீனிவாசன் "அது நம் சவுகரியத்தை ஒட்டியது? அவள் சாமார்த்தியத்தையும் சார்ந்தது". "இருபத்தி ஒன்று என்று தானியங்கு வண்டிகளில் எழுதி விளம்பரப்படுத்தி இருக்கிறார்களே தெரியுமா சார்" "அதற்கு முன் மணம் செய்யக் கூடாது; அது சட்டம்" "இப்பொழுது அவளுக்கு 32 ஆகிறது. அதற்கு மேலும் நீடிக்கலாமா? "நீடித்தால் அதுவும் குற்றம்தான், குற்றம்மட்டும் அல்ல; கொடுமையும் கூட". 4 : யார் வந்தாலும் குறைந்தது லட்ச ரூபாய் எதிர்பார்க்கிறார்கள்; நல்ல மாப்பிள்ளை வேண்டுமானால் இது குறைந்த தொகை" "நீ சேர்த்து வைத்திருக்க வேண்டும்" "ஆகுபெயர்க்கும் அன்மொழித் தொகைக்கும் உள்ள வேறுபாடு குறித்து ஐந்நூறு பக்கம் நூல் ஒன்று வெளியிட்டேன்; அந்தக் கடனையே இன்னும் அடைக்க முடியவில்லை.” "பெண் ஒருத்தியைப் பெற்றுவிட்டு இந்த வீண் வேலையில் இறங்கியது தவறு" "இப்பொழுது என்ன செய்வது?" "கலியாணம் முக்கியம்; அதற்காக நீ எதையும் செய்யலாம்; கடன் வாங்கலாம்; திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை". "ஒருத்தி கற்பு முக்கியமா கணவன் முக்கியமா என்று மனப் போராட்டம் நடத்தினாள் கணவனைக் காப்பாற்றினாள்”.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/130&oldid=806807" இலிருந்து மீள்விக்கப்பட்டது