பக்கம்:பரிசு மழை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 129 'எதுக்கு இதைச் சொல்கிறாய்?" "என் உத்தியோகத்தை இராஜினாமா செய்து விட்டேன். கிராடியுட்டி பணம், பென்ஷன் விற்பனைப் பணம் எல்லாம் ஒரு லட்சம் வரும், அதைக் கொண்டு அவளுக்குத் திருமணம் செய்து வைத்தேன்” என்றார். இரண்டையுமே என்னால் சீரணம் செய்ய முடியவில்லை. இப்படி நடக்கக் கூடாது? அப்படி நடக்கிறது: அதைக் கேட்கும் சூழ்நிலைகளை நாம் தவிர்க்க முடியவில்லை. "நீ இப்பொழுது என்ன செய்ய இருக்கிறாய்?" "பாதிச் சம்பளம் பென்ஷன் வரும். இது போதும்; இலக்கண நூல் எதுவும் எழுத மாட்டேன்; அச்சிடமாட்டேன். சிக்கனமாக வாழ முடியும்" என்றார். "நீ விவேகிதான்” அறிவுடன்தான் செயல்பட்டிருக் கிறாய்; அந்தக் கற்புக்கரசி செயலையும் நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. கணவனைக் காப்பாற்றினாள் கற்பைக் காத்துக் கணவனை இழந் திருந்தால் அவள் தன் வாழ்க்கையையும் இழந்திருப்பாள். அவளைக் குறை கூற முடியவில்லை. அவள் செய்தது நியாயந்தானா? என்று கேள்வி கேட்கவில்லை; தேவைதானா? என்பதுதான் கேள்வி. யாராவது அவளுக்கு உதவி இருக்கலாம். விசாரித்துப் பார்த்ததில் யாரும் உதவிக்கு வரவில்லை, சூழ்நிலை அத்தகையது என்று தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/131&oldid=806809" இலிருந்து மீள்விக்கப்பட்டது