பக்கம்:பரிசு மழை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 டாக்டர் ரா. சீனிவாசன் இந்த ஆசிரியர் அவர் தவறு செய்ததாகத் தெரியவில்லை; புத்திசாலித்தனமாகத்தான் பட்டது. 61. சத்திய சோதனை "ஏனுங்க படம் பார்க்கப் போ'றேன் என்று சொன்னிங்க போகலைங்களா?” "படம் பார்க்கிறது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்; இனிமேல் போகப் போறது இல்லை" என்று அவர் பதில் கூறினார். காரணம் சொல்லவில்லை. அன்று ஒரு புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார்; அதில் எழுதப்பட்டு இருந்தது. "காரியம் மட்டும் முக்கியம் இல்லை; அதற்காக எடுக்கும் முயற்சியும் வழியும்கூட அடிப்படை” என்று எழுதி இருந்தது. அந்த நேரத்தில் அது சரி என்று பட்டது. மூன்று வருஷத்துக்கு முன்னால் அவர் அவசரமாக ரயில் பயணம் செய்தார். அப்பொழுது இப்பொழுதுபோல் முன் பதிவு செய்தல் ஒழுங்காக அமுலில் இல்லை. அதற்கு என்று சில ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் இடம் பிடித்து டவல்' போட்டுவிட்டு உரிமை கொண்டாடினர். இவர் அவருக்கு அவர்கள் கேட்ட பதிவுத் தொகையைக் கொடுத்துப் பயணம் செய்தார். யாயமா என்று யோசனை செய்து கொண்டு Д]] து இருந்தா fr.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/132&oldid=806811" இலிருந்து மீள்விக்கப்பட்டது