பக்கம்:பரிசு மழை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 131 இந்தப் புதிய படம் எங்கும் இந்தப் படம் என்பதே பேச்சு; அதை எப்படியும் பார்ப்பது என்ற ஆவல் அவரைத் தூண்டியது, காசெட்டுகள் இப்பொழுது கெடுபிடியாகி விட்டன; கள்ளக் காதல் தடுக்கப்பட்டு விட்டது. தியேட்டருக்குச் செல்வது என்று முடிவு செய்தார்; போனவுடன் ரயில் பயணம் செய்ய முடியாது; இரண்டு வாரத்துக்கு முன் பதிவு செய்ய வேண்டி இருந்தது அதுவரை காத்திருக்கலாம். அதற்குள் அந்த ஆர்வம் ஆவியாகப் பறந்துவிடும். எதுவும் சூடாகச் சாப்பிட்டால் தான் சுவை. ஆறின கஞ்சியாக இருந்தாலும் பரவாயில்லை என்று பதிவு செய்யச் சென்றார். ஒரு மாதத்துக்குப் பதிவு ஆகிவிட்டது. போர்க்களம் செல்லும் வீரன் திரும்பி வருவது அவன் வீரத்துக்கு இழுக்கு அங்கே ஒரு பெண்ணும் ஒரு ஆணும் டிக்கட்டு' விற்றுக் கொண்டிருந்தனர். பதினைந்து ரூபாய் டிக்கட்டு முப்பத்தைந்துக்கு என்று சொன்னார்கள். இவருக்கு மனம் வரவில்லை. நேரே ஒரு உங்கள் நண்பர் என்று பாட்ஜ் குத்திக் கொண்டு சேவை புரிந்த காவலரை அணுகினார்; அவர் காக்கி சட்டை அவரை அடையாளம் காட்டியது. அவரிடம் சென்று புகார் செய்தார். அவர் முப்பது கொடுத்தால் தான் டிக்கட்டு தருவதாகக் கூறினார். வேலியே பயிர் மேய்வதை அறிகிறார். மனம் உடைந்து வீடு திரும்புகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/133&oldid=806813" இலிருந்து மீள்விக்கப்பட்டது