பக்கம்:பரிசு மழை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 0 டாக்டர் ரா. சீனிவாசன் மறுபடியும் கணக்குப் போட்டார். ஆட்டோவுக்குத் தரவேண்டும் மறுபடியும் தியேட்டருக்கு வருவதற்கு. காவல்காரரிடம் முப்பது கொடுத்து வாங்க விரும்ப வில்லை. தீமையின் அளவு ஆராய்ந்து செயல்படுதல் வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவரை முதலாளிடம் அனுப்பியது. அதாவது முதல் ஆள் அவரிடம் அனுப்பியது. முப்பத்தைந்து கொடுத்து விற்பனையாளரிடமே வாங்கினார். "எப்பவும் நாங்கள் அவருக்கு மாமூல் ஐந்து தருவோம்" என்று அவர்கள் தம் நிலையை எடுத்து உரைத்தனர். இந்த விசாரணையில் இறங்கிக் கொண்டிருந்தால் படம் ஓடிவிடும்; அதை ஒடிப்போய்ப் பிடிக்க வேண்டும். விளம்பர வேதனைகள் முடிவதற்கும் படம் ஆரம்பம் ஆவதற்கும் சரியாக இருந்தது. “உள்ளே கதை ஒடியது. அந்த ஹீரோ பிளாக் மார்க்கட்டில் டிக்கட்டு விற்கிறான். அவனோடு போட்டி போட்டுக் கொண்டு அவள் அதாவது கதாநாயகி அவனை வம்புக்கு இழுக்கிறாள். எல்லோரும் அவளிடம்தான் டிக்கட்டு வாங்குகிறார்கள். அவளை அவனால் வெல்ல முடியவில்லை. வேறு வழியில்லை. சமாதானம் பேசினான். அதாவது காதல் செய்கிறான். அதைத்தான் அவள் விரும்புவது. இப்படி அந்தக் கதை செல்கிறது. கதாநாயகனே பிளாக் மார்க்கட்டில் டிக்கட்டு விற்கிறான்; அதனால் அவன் ரசிகர்கள் அதைத் தொழிலாகச் செய்வது தவறு இல்லை என்பது புலப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/134&oldid=806814" இலிருந்து மீள்விக்கப்பட்டது