பக்கம்:பரிசு மழை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 8 133 பத்திரிகைகளில் அந்தப் படத்துக்கு வசூல் ஆகவில்லை என்று பேட்டி கொடுத்திருந்தார்கள். போட்ட முதலீடும் எடுக்க முடியவில்லை; கள்ள காசெட்டுகள்தாம் காரணம் என்று அறிக்கை விட்டனர். அந்த அனுபவத்திற்குப் பிறகு எந்தப் படமும் தியேட்டருக்குச் சென்று பார்ப்பது இல்லை என்று அவர் முடிவுக்கு வந்தார். அதைத்தான் அவர் தன் மனைவியிடம் தெரிவித்தார். "அது தானுங்க நானும் படத்துக்கு வருவது இல்லை; டிக்கட்டு பத்து ரூபாய் என்றால் பிளாக்குலே இருபது தர வேண்டி இருக்கிறது" என்று பின் மொழிந்தாள்; தீர்மானம் நிறைவேறியது. "நீ எங்கே போய் வருகிறாய்?" என்று கேட்டார். "கோயிலுக்கு இன்று விசேஷ நாளுங்க" என்றார் அந்த அம்மையார். "என்ன விசேஷம்?" “உள்ளே தரிசனம் பார்க்க ஏகப்பட்ட "கியூவு'; போய்ப் பார்த்துவிட்டு வந்தேன்' "எப்படி?” “உள்ளே குறுக்கு வழியில் அழைத்துப் போக ஐம்பது ரூபாய் கொடுத்தேன்; விட்டுவிட்டார்கள்” என்று தன் வெற்றியை உரைத்தார். அவர் படித்துக் கொண்டிருந்த புத்தகம் சத்திய சோதனை. மகாத்மா காந்தி எழுதியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/135&oldid=806815" இலிருந்து மீள்விக்கப்பட்டது